உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெரியநாயகி அம்மன் கோவிலில் தேர் திருவிழா

பெரியநாயகி அம்மன் கோவிலில் தேர் திருவிழா

தியாகதுருகம், ' தியாகதுருகம் அடுத்த சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.விழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உற்சவர் அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மயானக் கொள்ளை விழா நடந்தது. நேற்று 9ம் நாள் திருவிழாவையொட்டி, தேரோட்டம் நடந்தது.அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மன் தேரில் எழுந்தருளச் செய்து, சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.பக்தர்கள் வசதிக்காக கள்ளக்குறிச்சி, தியாகதுருகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. விழாவில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை