உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழையசீவரத்தில் 16ல் காஞ்சிபுரம் வரதர் பார்வேட்டை உற்சவம்

பழையசீவரத்தில் 16ல் காஞ்சிபுரம் வரதர் பார்வேட்டை உற்சவம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, பழையசீவரம் கிராமத்தில், நாளை மறுநாள், வரதர் பார்வேட்டை உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.இந்த உற்சவத்தை முன்னிட்டு, நாளை இரவு 9:30 மணிக்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், கோவிலில் இருந்து, கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு செல்ல உள்ளார்.பழையசீவரம் கிராமத்தில் இரவு தங்குகிறார். வரும் 16ம் தேதி மாட்டு பொங்கல் தினத்தன்று திருமஞ்சனத்திற்கு பின், மலை மீது இருக்கும் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.இதையடுத்து, மலையில் இருந்து இறங்கி வந்து பார்வேட்டை உற்சவம் நடைபெற உள்ளது. பழையசீவரம் மலை மீது இருக்கும் கோவிலில் இருந்து, புறப்பட்டு திருமுக்கூடல் அப்பன் வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு செல்ல உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை