உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணை வழங்கல்

100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணை வழங்கல்

குளித்தலை: குளித்தலையில், கலைஞரின் கனவு இல்லம் மற்றும் கிராமப்புற வீடுகள் பழுது பார்ப்பு திட்டத்தின் கீழ், 100 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டது.குளித்தலை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நேற்று குளித்தலை யூனி-யனுக்குட்பட்ட, 13 பஞ்., பகுதியில் உள்ள மக்களுக்கு, கலை-ஞரின் கனவு இல்லம் மற்றும் கிராமப்புற வீடுகள் பழுதுபார்ப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வேலை உத்தரவு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை வைத்தார். யூனியன் மேலாளர் சுரேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சகுந்தலாராணி, பிச்சை-மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 20 பயனாளிகளுக்கு, 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 80 பயனாளிகளுக்கு கிராமப்புற வீடுகள் பழுது பார்ப்பு திட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ., மாணிக்கம் பணி உத்தரவு ஆணை வழங்கினார்.மாவட்ட பஞ்., துணைத் தலைவர் தேன்மொழி தியாகராஜன், மாஜி யூனியன் குழு தலைவரும் தி.மு.க., ஒன்றிய செயலாளரு-மான தியாகராஜன், பஞ்., தலைவர்கள் கே.பேட்டை. தாமரைச்-செல்வி, நல்லுார் கலா, இனுங்கூர் பாலு மற்றும் யூனியன் அலுவ-லர்கள், தி.மு.க., பிரமுகர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை