உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பத்திரிகை, டி.வி.,க்களுக்கு நன்றி இசை அமைப்பாளர் தேவா

பத்திரிகை, டி.வி.,க்களுக்கு நன்றி இசை அமைப்பாளர் தேவா

கரூர்: ''பத்திரிகை, டி.வி.,க்கள் மூலம் தான் திரைக்கு பின்னால் உள்ள கலைஞர்கள் வெளியே தெரிகின்றனர்,'' என இசை அமைப்-பாளர் தேவா தெரிவித்தார்.கரூர் அருகே, கோடங்கிப்பட்டியில், வரும் ஜன., 17ல் இசை அமைப்பாளர் தேவாவின் இசை கச்சேரி நடக்கிறது. அதற்காக, டிக்கெட் அறிமுக விழா, நேற்று, கரூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. அதில், இசை அமைப்பாளர் தேவா பேசியதாவது:கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் நான் இசை அமைத்த பாடல்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை, இன்றைய தலைமுறையினர் ரசிக்கின்றனர். அதுவே எனக்கு போதும். இதனால், எனது பாடலுக்கு ராயல்டி கேட்பது இல்லை. சினிமாவில் நடிக்கும் கலைஞர்களை ரசிகர்களுக்கு நன்-றாக தெரியும். ஆனால், என்னை போல் திரைக்கு பின்னால், பணியாற்றும் கலைஞர்களை பத்திரிகை, டி.வி.,க்கள் மூலம் தான் ரசிகர்களுக்கு தெரிகிறது.இதனால், ரசிகர்கள் எங்களை தேடி ஆட்டோ கிராப் வாங்கவும், போட்டோ எடுக்கவும் வருகின்றனர். இதற்கு காரணம், பத்தி-ரிகை மற்றும் டி.வி.,க்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கரூரில் வரும் ஜன., 17ல் இசை கச்சேரியில் நிறைய பாடகர்கள், பாட-கிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை