மேலும் செய்திகள்
கனக தோனியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
9 hour(s) ago
கரூரில் சூரசம்ஹார விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்
9 hour(s) ago
கணவன் மாயம் மனைவி புகார்
9 hour(s) ago
பருவமழை முன்னேற்பாடு நெடுஞ்சாலைத்துறை ஒத்திகை
9 hour(s) ago
குளித்தலை: குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழா ஆலோசனை கூட்டம் நேற்று காலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ரவி தலைமையில் நடைபெற்றது.ஹிந்து சமய அறநிலைய துறை மாவட்ட உதவி ஆணையர் ஜெயதேவி, தாசில்தார் மகுடேஸ்வரன், கோவில் செயல் அலுவலர் சந்திரமோகன், நகராட்சி கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வரும், 25 மாலை, 5:00 முதல் 6:00 மணிக்குள் காவிரி நதியில் தீர்த்தவாரி திட்டமிட்டப்படி நடைபெற வேண்டும். சுவாமிகளை துாக்கி வரும் பொது மக்கள் சமுதாயம், மற்றும் அரசியல் சார்ந்த பனியன், சட்டை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கோவில் செயல் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். காவிரி படுகையில் சுவாமிகள் சந்திப்பு மற்றும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் இடம் ஆகிய இடங்களில் அடிப்படை வசதிகள் செய்தல், குற்றச்செயல்கள் தடுக்க 'சிசிடிவி' கேமரா பொருத்துதல், தைப்பூசம் சிறப்பாக நடைபெற அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் வருவாய், பொதுப்பணி, மின் வாரியம், நெடுஞ்சாலை, பொது சுகாதாரம், தீயணைப்பு, போலீஸ் ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள், எட்டு கோவில் செயல் அலுவலர்கள், சிவாச்சாரியார்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago