உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: சென்னை பல்கலைக் கழகத்தில் நேற்று, 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி வாசிக்க, கல்லுாரி மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.இந்நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்-ளியில், காணொலியில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சரயு, எஸ்.பி., தங்கதுரை முன்னிலையில், போதை பழக்கத்திற்கு எதி-ரான உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர்.பின்னர் நடந்த போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்பு-ணர்வு பேரணியை, எஸ்.பி., தங்கதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், மாணவர்கள், போதை பொருட்களால் ஏற்-படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, மீண்டும் பள்ளியிலேயே நிறைவடைந்தது.உதவி ஆணையர் (ஆயம்) குமரன், மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்-வரி, கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், உள்பட பலர் கலந்து கொண்டனர்.* ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று துவங்கியது. ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் ஓசூர் சப்க-லெக்டர் பிரியங்கா, எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா, டி.எஸ்.பி., பாபுபிரசாந்த், தாசில்தார் விஜயகுமார், தலைமையாசி-ரியர் முனிராஜ், கவுன்சிலர் மோசின்தாஜ், இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் மாணவ, மாணவியர், போதை பொருளுக்கு எதிரான உறு-திமொழி எடுத்து கொண்டனர்.* ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்-நிலைப்பள்ளி, சிங்காரப்பேட்டை போலீசார் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டியை நடத்தினர். தலைமை ஆசிரியர் தர்மன், சிங்காரப்பேட்டை எஸ்.ஐ., கணேஷ் பாபு முன்னிலை வகித்தனர். * ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஊத்தங்கரை போலீசார் இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்