உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேங்கிய சாக்கடை கழிவுகள் பொக்லைன் மூலம் அகற்றம்

தேங்கிய சாக்கடை கழிவுகள் பொக்லைன் மூலம் அகற்றம்

கிருஷ்ணகிரி, ஆக. 23-கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், சேலம் சாலையில் அரசு மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், வங்கிகள், ஜின்னாரோட்டில் துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை உள்ளன. நகரின் முக்கிய பகுதியான இங்கு, முறையான சாக்கடை கால்வாய் இல்லை. கால்வாய் உள்ள பகுதிகளில் அவை பல ஆண்டுகளாக துார்வாரப்படவும் இல்லை. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் புகாரளித்தனர். இதையடுத்து, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார், பொக்லைன் வைத்து, இப்பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றினார். மேலும், இங்கு கழிவுநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை