உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 12 நாட்டு துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

12 நாட்டு துப்பாக்கிகள் வனத்துறையிடம் ஒப்படைப்பு

தர்மபுரி: பென்னாகரம் அருகே, வனப்பகுதி கிராமங்களை ஒட்டியுள்ள இடங்களில் அனுமதியின்றி வைத்திருந்த, 12 நாட்டு துப்பாக்கி-களை வனத்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.தர்மபுரி வனக்கோட்டம், பாலக்கோடு வனச்சரகத்தில், வனத்தை ஒட்டிய கிராமப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு, சட்டவிரோதமாக உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வனத்து-றையிடம் ஒப்படைக்கும்படி, தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்ப-டுத்தப்பட்டது. அதன் விளைவாக, தர்மபுரி மாவட்டம், பென்னா-கரம் வட்டம், ஏரிமலை பகுதியில் சட்ட விரோத மாக உரிமம் இல்லாமல் வைத்திருந்த, 12 நாட்டு துப்பாக்கிகளை கிராம மக்கள் தாமாக முன்வந்து வனத்துறையிடம் நேற்று ஒப்படைத்-தனர்.இத்தகவலை, பாலக்கோடு வனச்சரக அலுவலர் நடராஜன் தெரி-வித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ