| ADDED : ஏப் 28, 2024 02:02 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மத்திகிரி அருகே ராயல் டவுன் பகுதியை சேர்ந்தவர் மேவால்ட், 57, நவதி மத்திய தமிழ் சர்ச்சில் மத போதகராக உள்ளார். அதே பகுதியில் பிளஸ் 2 முடித்து விட்டு, நீட் தேர்விற்கு தயாராகி வரும், 17 வயதான நேபாள நாட்டு மாணவியிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தில், மாணவி புகார் செய்தார். அவர்கள் அளித்த புகாரின்படி, ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதைந் தொடர்ந்து போக்சோ சட்டத்தில், மேவால்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.