மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
15 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
15 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
15 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
15 hour(s) ago
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., - எம்.பி., மணி, நேற்று கடத்துார் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம், நொச்சிக்குட்டை, அம்பாலப்பட்டி, தாதனுார், புதுார், ராமியணஹள்ளி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக தாளநத்தம் கிராமத்திற்கு காலை, 11:30 மணிக்கு வந்த எம்.பி., மணி பொதுநுாலகம் அருகில் பேசிவிட்டு வந்தபோது அவரை, 20க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர்.அப்போது, முன்பு எம்.பி.,யாக இருந்த செந்தில்குமார் தங்கள் கிராமத்திற்கு எதுவும் செய்யவில்லை, 100 நாள் வேலை திட்டத்தில் தங்களுக்கு, பணி வழங்குவதில்லை என புகார் கூறியதுடன், தங்கள் கிராமத்திற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புட்டிரெட்டிப்பட்டியில் ரயில்வே மேம்பாலம், சின்டெக்ஸ் தொட்டி, நுாலக வசதி உள்ளிட்டவைகளை செய்து கொடுக்க, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மொபைல்போனில் பி.டி.ஓ.,விடம் பேசிய, எம்.பி., மணி, பெண்களுக்கு,100 நாள் திட்டத்தில் பணி வழங்க கேட்டுக்கொண்டார்.மேலும், ரயில்வே மேம்பாலத்திற்கு, மத்திய அமைச்சரிடமும், சுகாதார நிலையம் அமைக்க, மாநில அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது தான், நான் வந்திருக்கிறேன். எதுவாக இருந்தாலும் என்னிடம் கோரிக்கை மனு கொடுங்கள், அதனை பரிசீலித்து செய்து தருகிறேன். இந்த, பஞ்.,ல் தான் எனக்கு அதிகமான ஓட்டுக்கள் கிடைத்தது. அதனால், இப்பகுதி மக்களின் நன்றியை மறக்க மாட்டேன் என பேசினார். இதையடுத்து, 12:00 மணிக்கு முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.எம்.பி.,யுடன் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago