உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு கிருஷ்ணகிரியில் 2ம் கட்ட பயிற்சி

தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு கிருஷ்ணகிரியில் 2ம் கட்ட பயிற்சி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலையொட்டி, பதற்றமான ஓட்டுச்சாவடிகளை கண்காணிப்பதற்காக தேர்தல் நுண் பார்வையாளர்களாக, 114 வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, முதல்கட்ட பயிற்சி நடந்து முடிந்த நிலையில், 2ம் கட்ட பயிற்சி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர் கிரண்குமாரிபாசி தலைமை வகித்தார். தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சரயு முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளை, எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என, பயிற்சிகள் வழங்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) லெனின், முன்னோடி வங்கியின் மேலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை