மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
19 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
19 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
19 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
19 hour(s) ago
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, தாமோதரஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட சின்னபாறையூரை சேர்ந்தவர் மாதன், 75, விவசாயி; இவரின் அனுபவத்தில் அதே பகுதியில் கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, 60 சென்ட் இடம் இருந்தது. இந்நிலையில் மாதன் உறவினரான சின்னசாமி, 58, என்பவர், அந்த இடம் தனக்கு சொந்தமானது என, வழக்கு தொடுத்து சாதகமான தீர்ப்பு பெற்றுள்ளார்.ஐகோர்ட் உத்தரவின்படி நேற்று, சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறையினர் சென்றனர். பாதுகாப்பு பணியில், பாரூர் எஸ்.ஐ.,க்கள் கார்த்திகா, சிவசந்திரன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தனர். வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போது மாதன் மற்றும் அவரின் மகன் லட்சுமணன், 33, மாதன் மகள்களான, 4 பேர் உட்பட, 10க்கும் மேற்பட்டோர் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தற்கொலைக்கு முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்தனர். பின் சின்னபாறையூரை சேர்ந்த பொதுமக்கள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாரிடம், வரும், 8ல் நிலம் அளவீடு செய்ய வழிவகை செய்யும் விதத்தில், மாதன் மற்றும் சின்னசாமியிடம் சுமுக பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் காண்பதாக, உத்திரவாதம் அளித்ததை அடுத்து, போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் திரும்பிச் சென்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago