கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில், 2.74 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளை, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். வேப்பனஹள்ளி அடுத்த நாடுவனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட மேலுார் கொல்லகொட்டியில், 50.34 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது. வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். இதில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார்.தொடர்ந்து நாச்சிக்குப்பத்திலிருந்து மாணவரனப்பள்ளி வரை, சி.ஆர்.ஐ.டி.பி., நிதியில், 1.62 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கம், பதிமடுகு பஞ்.,க்கு உட்பட்ட கட்டாயம்பேடு கிரா-மத்தில் இருந்து கொல்லப்பள்ளி வரையில் நபார்டு திட்டத்தில், 62 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி என மொத்தம், 2.74 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை பணிகளையும் முனுசாமி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளுக்கு வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், அலுவ-லர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.