உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு மழையின்றி நீர்வரத்து சரிவு

கே.ஆர்.பி., அணைக்கு மழையின்றி நீர்வரத்து சரிவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த அக்., 24 வரை பரவலாக மழை பெய்தது. இதனால் கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், அக்., 25 முதல் நேற்று வரை, 25 நாட்களாக மழையின்றி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிந்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம், 613 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 474 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக கால்வாயில், 12 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 426 கன அடி என மொத்தம், 474 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 49.50 அடியாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி