மேலும் செய்திகள்
தேசியத் தலைவர் படத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
14 hour(s) ago
எஸ்.ஐ.ஆர்., மண்டல ஆய்வுக்கூட்டம்
14 hour(s) ago
மதுரை : மாற்றுத்திறனாளிகள் தமிழக கிரிக்கெட் வீரர் மணிகண்டன் 27, விபத்தில் இறந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு பி.சி.சி.ஐ., நிதியுதவி வழங்க வேண்டும் என தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் கூறியதாவது:நாமக்கல் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மணிகண்டன் 27, ஏழாண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்தார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு டூவீலரில் செல்லும் போது வலிப்பு ஏற்பட்டு மரத்தில் மோதினார். நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். கடந்த மாதம் தான் அவருக்கு திருமணம் நடந்தது. ஐ.பி.எல்., அல்லது டி.என்.பி.எல்., கிரிக்கெட் வீரர் விபத்தில் இறந்திருந்தால் பி.சி.சி.ஐ., எந்தமாதிரி உதவி செய்யுமோ அதுபோல மணிகண்டன் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும். தமிழக அரசும் நிதியுதவி வழங்க வேண்டும்.இந்திய அணிக்காக, தமிழகத்திற்காக கிரிக்கெட் விளையாடும் எங்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வை பி.சி.சி.ஐ. உறுதி செய்ய வேண்டும். எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றார்.
14 hour(s) ago
14 hour(s) ago