உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அடுத்தவரது வாக்காளர் அட்டை முகவரியை மாற்றியவர் மீது வழக்கு

அடுத்தவரது வாக்காளர் அட்டை முகவரியை மாற்றியவர் மீது வழக்கு

திருமங்கலம், : மதுரை மாவட்டம் திருமங்கலம் ஜவஹர் நகர் காளியப்பன் 81. இவர் 50 ஆண்டுகளாக ஒரே தெருவில் வசித்து வருகிறார்.இவர் திருமங்கலம் பி.கே.என்., ஆண்கள் பள்ளி ஓட்டுச்சாவடியில் வழக்கமாக தேர்தல்களில் ஓட்டளிப்பார். கடந்த 2022ம் ஆண்டு இவரது ஓட்டை இவருக்கே தெரியாமல் பச்சகோப்பன்பட்டி கள்ளர் பள்ளிக்கு யாரோ மாற்றியுள்ளனர். தாலுகா அலுவலகத்தில் விசாரித்த போது இவருக்கு ஏற்கனவே அறிமுகமான அதே கிராமத்தைச் சேர்ந்த கோட்டை திருப்பதி என்பவர் தன் அலைபேசி எண்ணை பயன்படுத்தி தேர்தல் கமிஷன் இணையதளம் வாயிலாக மாற்றியது தெரிந்தது.ஜூலை மாதம் திருமங்கலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த விசாரணையின் போது கோட்டை திருப்பதி ஓட்டை மாற்றியதை ஒப்புக்கொண்டார். அவர் மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ