உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்

மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்

மதுரை: மதுரையில் பள்ளி, கல்லுாரிகள், பொது நல அமைப்புகள் உட்பட பல்வேறு நிறுவனங்களும் சுதந்திர தினத்தை கொண்டாடின.

அரசு அலுவலகங்கள்

மதுரை ஆவின் மெயின் அலுவலகத்தில் பொது மேலாளர் சிவகாமி கொடியேற்றினார். ரூ.90 மதிப்பில் 100 கிராம் கொண்ட 5 வகை ருசிகளில் ஸ்கூப் ஐஸ்கிரீம்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

பொது அமைப்புகள்

ஜெயபாரத் கிளாசிக் சிட்டி குடியிருப்போர் நலச்சங்க விழாவில் துணை கலெக்டர் தாமஸ்பிரிட்டே கொடியேற்றினார். சங்கத் தலைவர் பிரேம்சந்தர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பரசுராமன், டேவிட், ராஜ்குமார், ராமலட்சுமணன், அடைக்கல சகாயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் தங்கராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டது. முன்னாள் தலைவர் கலையரசன், அனைத்துதுறை நான்காம் பிரிவு ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் ராமச்சந்திரன், திருப்பதி மகேந்திரசாமி, சாதிக்பாஷா, கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.செல்லுார் கண்மாய்கரையில் நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் மக்கள் பொதுநல அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் வழக்கறிஞர் சந்திரன் கொடியேற்றினார். சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன், நிர்வாகிகள் தன்ராஜ், கண்ணன், முத்துப்பாண்டி பங்கேற்றனர். ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் விக்டர் தலைமையில் விழா நடந்தது. நடிகர்கள் பிரேம்ஜி, செந்தில்குமார், எழுத்தாளர் விவேக் ராஜ், மலையாண்டி, ராஜபாண்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடிகைகள் ஷபானா, அங்கிதா, பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கோமதி புரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் செயற்குழு உறுப்பினர் பன்னீர் செல்வன் கொடியேற்றினார். சங்கத்தலைவர் ராகவன், செயலாளர் பழனிக்குமார், இணைச்செயலாளர்கள் திரவியம், சங்கர், பொருளாளர் காசி, உப தலைவர் ரகுபதி, செயற்குழு உறுப்பினர்கள் சேதுராம், நரசிம்மராஜ் கலந்து கொண்டனர்.*மதுரை சாக்கு வியாபாரிகள் சங்க விழாவில் தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் கொடியேற்றினார். சங்கத் தலைவர் சிவபாலன் தலைமை வகித்தார். டாக்டர் சம்பத், கருப்பசாமி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் சையது அபுதாகீர், சங்க செயலாளர் கதிரேசன், பொருளாளர் ஜெயபாண்டியன் கலந்து கொண்டனர்.* நரிமேடு சிங்கராயர் காலனி குடியிருப்போர் சங்கத்தில் நடந்த விழாவில் டாக்டர் சையது அப்துல்காதர் கொடியேற்றினார். வணிக வரித்துறை உதவி கமிஷனர் (ஓய்வு) சென்ராயன், சங்க நிர்வாகிகள் பத்மநாபன், பீட்டர் ஆண்டனி, சங்கரலிங்கம், அதிபதி, அசோக், மதியழகன், அஜய், முத்துக்குமார், மோகன சுந்தரம் கலந்து கொண்டனர்.

பள்ளி, கல்லுாரி

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் மதுரைக்கல்லுாரி வாரியப் பள்ளிகள் செயலாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். தலைவர் சங்கரன் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ஆதிஞானகுமரன் வரவேற்றார். சிம்மக்கல் எஸ்.பி.ஐ., வங்கி மேலாளர் சித்தார்த்தா கொடி ஏற்றினார். உதவி தலைமையாசிரியர் திருவேங்கடத்தான் நன்றி கூறினார். மாணவர்களின் அணிவகுப்புகள் நடந்தன.வேடர் புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊராட்சி தலைவர் கண்ணன் கொடியேற்றினார். தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமை வகித்தார். ஆசிரியர்கள் நாகேஸ்வரி, ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் மண்டல இணை இயக்குநர் நந்தகோபால் தலைமை வகித்தார். உதவி இயக்குநர்கள் பழனிவேலு, எம்.எஸ்.சரவணன், என்.ஆர். சரவணன், உதவி டாக்டர்கள் முத்துராம், அறிவழகன், கால்நடை உதவியாளர்கள் சுதாகரன், நிர்மலா, சண்முகத்தாய், கார்த்திகா கலந்து கொண்டனர்.லேடிடோக் கல்லுாரியில் விலங்கியல் துறை இணைப்பேராசிரியர் சாந்தி கொடியேற்றினார். முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, சிற்றாலயப் பொறுப்பாளர் ஜெஸி ரஞ்சிதா, இணைப்பேராசிரியை பிரீத்தா ஜோசப் பங்கேற்றனர். மேலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் முருகேசன் கொடியேற்றினார். மாணவர்களுக்கு ஊராட்சி தலைவர் கோபிநாத் பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் இளங்கோவன், முகமது ரபி, நாகரத்தினம், மீனலோகினி, அனுசுயா, ஜீவன்பிரகாஷ், நாகராஜன் பங்கேற்றனர். அழகர்கோவில் சுந்தரராஜா பள்ளியில் பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., கொடி ஏற்றினார். அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லதுரை தலைமை வகித்தார். வலையபட்டி ஊராட்சி தலைவர் தீபா உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் மகாமணி நன்றி கூறினார். தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஏற்பாடு செய்தார்.எம்.ஆர்.ஆர்., எம்.ஏ.வி.எம்.எம்., மெட்ரிக் பள்ளியில் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கொடியேற்றினார். தாளாளர் ராமமூர்த்தி வரவேற்றார். தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.நாகமலை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் பொருளாளர் நல்லதம்பி, முதல்வர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் சண்முக பாண்டியராஜா கொடி ஏற்றினார். நாகமலை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் கல்வி அறக்கட்டளை உறுப்பினர் ராஜசெல்வன் தலைமை வகித்தார். முன்னாள் தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் கோவிந்தன் கொடி ஏற்றினார். மதுரை எல்.கே.பி.,நகர் அரசு நடுநிலைப்பள்ளி விழாவில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி கொடி ஏற்றினார். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன், கவுன்சிலர் நுார் முகமது, ஊராட்சி துணைத் தலைவர் முருகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். கொடிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி விழாவில் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவி உமாதேவி கொடி ஏற்றினார். மதுரை அவனியாபுரம் எஸ்.பி.ஜே., மெட்ரிக் பள்ளி விழாவில் தலைமை ஆசிரியை அபர்ணா தலைமையில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர் சர்மிளா திலகவதி கொடி ஏற்றினார்.கருமாத்துார் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளி விழாவில் பாதிரியார் ஆண்டனி லிவ்வின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம் கொடி ஏற்றினார். மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கொடி ஏற்றினார். நாகமலை என்.எம்.எஸ்., விஜயலட்சுமி சஞ்சீவிமலையன் பள்ளியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் விஜய் ஆனந்த் கொடி ஏற்றினார். புரவலர்கள் சஞ்சீவிமலையன், விஜயலட்சுமி, தாளாளர் ராம சுந்தரசேகரன், முதல்வர் செல்வராஜ்குமார் பங்கேற்றனர்.பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லுாரியில் டாக்டர் கமல்பாபு கொடி ஏற்றினார். கல்லுாரி ஒன்றியத் தலைவர் சந்திரருசிகா வரவேற்றார். முதல்வர் விசுமதி, தாளாளர் சிவராம் பேசினர். மதுரை எச்.எம்.எஸ்., காலனி பாரத் மாடர்ன் துவக்கப்பள்ளியில் சேர்மன் வெங்கடேஸ்வரன் கொடி ஏற்றினார். தாளாளர் காளிமுத்து பங்கேற்றார். மதுரை பசுமலை சி.எஸ்.ஐ., ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லுாரி விழாவில் துணை முதல்வர் மெர்லின் தலைமை வகித்தார். நிர்வாகி யாக்கோபு கொடி ஏற்றினார்.

வாடிப்பட்டி

நகர் லயன்ஸ் கிளப் சார்பில் சல்லக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தலைவர் பாபு சரவணன் கொடி ஏற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி, கிளப் நிர்வாகிகள் குணசேகரன், சங்குபிள்ளை, தனபால், சிவசங்கர், பொருளாளர் ராஜபிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.குலசேகரன்கோட்டையில் அன்பே கடவுள் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகி கவுரிநாதன் தலைமையில், கூட்டுறவு துறை தணிக்கையாளர் கண்ணன் முன்னிலையில் ஆடிட்டர் ராமானந்தம் கொடி ஏற்றினார். அலங்கா நல்லுார் ஒன்றியம் காந்தி கிராமத்தில் ஊராட்சி துவக்க பள்ளியில் ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில் சுதந்திர தினவிழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் பாலன், மணிராஜா மாணவர்களுக்கு இனிப்பு, கல்வி உபகரணங்கள் வழங்கினர். ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவகுமார், வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

திருப்பரங்குன்றம்

திருநகர் அமிர்த வித்யாலயா பள்ளியில் முதல்வர் சசிரேகா தலைமையில், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ. சங்கையா கொடியேற்றினார். அகில பாரத அனுமன் சேனா சார்பில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் தலைமையில் நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் கொடியேற்றினார்.

மேலுார்

மேலுார் அரசு கலைகல்லூரியில் முதல்வர் அந்தோணி செல்வராஜ் தேசிய கொடியேற்றினார். கலை, விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். கல்லுாரியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.

பேரையூர்

கே.கே.ஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் காமாட்சி கொடியேற்றினார். அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் மகேஷ்குமார் கொடியேற்றினார். எஸ்.கீழப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தேசிய கொடியேற்றினார். ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி உட்பட பலர் பங்கேற்றனர்.டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் தலைமை ஆசிரியர் சந்திரா கொடியேற்றினார். விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எம்.எஸ்.ஆர்.மெட்ரிக் பள்ளியில் தாளாளர் சீனிவாசன் கொடியேற்றினார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் தங்கராம் கொடியேற்றினார்.

வாடிப்பட்டி

மரியம்மாள்குளம் ஆர்.சி., ஆரம்ப பள்ளியில் தாளாளர் வளன் தலைமையில், தலைமை ஆசிரியர் அருள் ஆரோக்கிய செபஸ்டின் முன்னிலையில், மதுரை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஸ்டார் குரு கொடி ஏற்றினார். பரவை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜூலான் பானு தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் கலா மீனா கொடியேற்றினார். துணைத்தலைவர் ஆதவன் வரவேற்றார்.சமயநல்லுார் எம்.டி.எஸ்., துவக்க பள்ளியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயலட்சுமி கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியை சீலா மணி உட்பட பலர் பங்கேற்றனர். தேனுார் பாரதியார் திடலில் புரவலர் சாமிக்காளை தலைமையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாயாண்டி, பேராசிரியர் அழகர்சாமி முன்னிலையில் விவசாயி செல்லம் கொடியேற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ