உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதை தமிழ்நாடு செல்லுார் ராஜூ பேட்டி

போதை தமிழ்நாடு செல்லுார் ராஜூ பேட்டி

மதுரை: மதுரை பைபாஸ் ரோடு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நீர், மோர் வழங்கும் நிகழ்வை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தொடங்கி வைத்தார்.அவர் கூறியதாவது: அரசு பஸ்களில் உதிரி பாகங்களை ஓட்டுநர், நடத்துனர் தங்கள் செலவில் மாற்ற போக்குவரத்து கழக நிர்வாகம் நிர்பந்தம் செய்கிறது. கடினமான பணிகளை அண்ணா தொழிற்சங்க ஓட்டுநர்களுக்கும், எளிமையான பணிகளை தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்க ஓட்டுநர்களுக்கும் நிர்வாகம் வழங்குவது கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியளவில் போதைப்பொருள் பயன்பாட்டு தளமாக குஜராத்தும், தமிழக அளவில் தமிழ்நாடும் விளங்குகிறது. போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை