உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டீ கடையில் கவிழ்ந்த டேங்கர் ஒடிசாவில் ஐந்து பேர் பலி

டீ கடையில் கவிழ்ந்த டேங்கர் ஒடிசாவில் ஐந்து பேர் பலி

பெர்ஹாம்பூர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில், பஸ் மீது மோதிய டேங்கர் லாரி சாலையோர டீ கடை மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில், ஐந்து பேர் பலியாகினர்; 12 பேர் காயம் அடைந்தனர்.ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அஸ்கா நகர் நோக்கி, டேங்கர் லாரி ஒன்று நேற்று காலை வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, பயணியருடன் எதிரே வந்த பஸ் மீது டேங்கர் லாரி மோதியது.இதைத்தொடர்ந்து அந்த டேங்கர் லாரி அருகேயிருந்த சாலையோர டீகடை மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில், பயணி ஒருவரும், டீக்கடையில் இருந்த மூவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் உயிரிழந்தார். இதனால், பலி ஐந்தாக உயர்ந்தது. இறந்தவர்கள் யார் என இன்னும் அடையாளம் காண முடியவில்லை.ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி