உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்ட நீதிமன்றங்களில் செப்., 14ல் தேசிய லோக் அதாலத்

மாவட்ட நீதிமன்றங்களில் செப்., 14ல் தேசிய லோக் அதாலத்

நாமக்கல், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான குருமூர்த்தி வெளியிட்ட அறிக்கை:தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தல்படி, நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு, பரமத்தி மற்றும் ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் நீதிமன்றங்களில், வரும் செப்., 14ல், தேசிய அளவிலான லோக் அதாலத் நடக்கிறது.இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள். உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும்.மக்கள் நீதிமன்றம் முன் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் யாருக்காவது நீதிமன்றத்தில் மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில், சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை