உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வேன் கவிழ்ந்து விபத்து

வேன் கவிழ்ந்து விபத்து

ப.வேலுார்: அரியலுாரை சேர்ந்தவர்கள், ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோவிலுக்கு செல்ல, நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, வேனில் சென்று கொண்டிருந்தனர். நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே, கட்டிப்பாளையம் பகுதியில் வேன் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், அரியலுாரை சேர்ந்த டிரைவர் முருகானந்தம், வேனை ஓட்டி வந்துள்ளார்.வேனில், 18 பேர் பயணம் செய்தனர். இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த அரியலுாரை சேர்ந்த சபாபதி, 25, அருணாசலம், 45, குமார், 37, கோவிந்தன், 35, மனோகர், 55, உள்பட, 15 பேர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை