உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 20ல் தனியார் துறை வேலைவாய்ப்பு பணி நாடுனர் பங்கேற்க அழைப்பு

20ல் தனியார் துறை வேலைவாய்ப்பு பணி நாடுனர் பங்கேற்க அழைப்பு

நாமக்கல்: 'வரும், 20ல், ராசிபுரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. பணி நாடு-னர்கள் பங்கேற்று பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை-வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும், 20 காலை, 9:00 முதல், 3:00 மணி வரை, ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கி-றது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகிக்-கிறார்.முகாமில், 5 முதல், பிளஸ் 2 வரை பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகளும், தையல் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்ற-வர்களும் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். மேலும், 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்-கேற்று, 10,000க்கும் அதிகமான காலி பணியிடங்-களை நிரப்ப உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களு-டைய சுயவிபரம், உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து-ள்ளலாம்.வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொள்ள, 04286--222260 அல்லது 63803-69124 ஆகிய தொலைபேசி, மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி