மேலும் செய்திகள்
அபாயத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,:பொதுமக்கள் அச்சம்
07-Nov-2025
டி.என்.43 அஷ்ரப் குழு சங்கமம் நிகழ்ச்சி
07-Nov-2025
பூங்காவில் காய்ந்த மலர்கள்
07-Nov-2025
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
07-Nov-2025
ஊட்டி;'' 60 ஆண்டு காலமாக தீர்க்கப்படாத அத்திக்கடவு-அவிநாசி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன்,'' என, எம்.எல்.ஏ., தனபால் பேசினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனின் தந்தையும், முன்னாள் சபாநாயகருமான தனபால் பேசியதாவது:எனது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கழக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, வெற்றி பெற செய்ய வேண்டும். நான் ஏழு முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். நான் பணியாற்றிய இடங்களில் எல்லாம், மக்களின் பிரச்னைகளை தீர்த்து வந்துள்ளேன். சங்ககிரி தொகுதியில் எம்.எல்.ஏ., வாக இருந்தபோது தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடியது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., இடம் பேசி, அங்கு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். அதுதான் தமிழகத்தில் முதல் கூட்டு குடிநீர் திட்டம்.அதேபோல, புறவழி சாலையை உருவாக்கி தந்துள்ளேன். அவிநாசி தொகுதியிலும், பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளேன்.60 ஆண்டு காலமாக தீர்க்கப்படாத அத்திக்கடவு - - அவிநாசி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். நான் செயல்படுத்திய திட்டங்களுக்கு நீண்ட பட்டியலே உள்ளது.அதேபோல, எனது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உங்களது கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றி காட்டுவார். அவருக்கு, அந்த வாய்ப்பை நீங்கள் தரவேண்டும்.இவ்வாறு தனபால் பேசினார். முன்னாள் அமைச்சர் வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025