| ADDED : ஏப் 27, 2024 01:06 AM
ஊட்டி;ஊட்டி லோயர் பஜார் சாலை நடைப்பாதையில் வாகனங்கள் நிறுத்துவதால், மக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுஉள்ளது.ஊட்டி நகரில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த எதுவாக, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், நகரசாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.தற்போது, கோடை சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா வாகனங்களின் இயக்கமும் அதிகமாக உள்ளதால், நெரிசலை குறைக்க திணற வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில், லோயர் பஜார் சாலையில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், நெரிசல் மிகுந்த சாலையில் மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.எனவே, போக்குவரத்து போலீசார், நடைபாதையில் விதிமுறை மீறி நிறுத்தப்படும் வாகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.