உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோவிலில் இரண்டு நாட்கள் தங்கி மாதேஸ்வரர் தரிசனம் செய்த மக்கள்

கோவிலில் இரண்டு நாட்கள் தங்கி மாதேஸ்வரர் தரிசனம் செய்த மக்கள்

கூடலுார்;கூடலுார் நந்தட்டி ஸ்ரீ மாதேஸ்வரர் கோவில் திருவிழாவில், படுகர் மற்றும் பழங்குடி மக்கள் இரண்டு நாட்கள் தங்கி, பாரம்பரிய இசையுடன் நடனமாடி சாமி தரிசனம் செய்தனர்.கூடலுார் நந்தட்டி ஸ்ரீ மாதேஸ்வரர் கோவில் திருவிழா, 24ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு, 10:00 மணிக்கு ஜம்மக்காரர் (பூஜாரி) குலதெய்வ பூஜையும், ஸ்ரீமாதேஸ்வரரை வணங்கினர். 25ம் தேதி பூஜாரி வீட்டிலிருந்து மாதேஸ்வரரின் 'சில்லான' ஆபரணங்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து காலை, 11:30 மணிக்கு கணபதி ஹோமம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக சிறப்பு பூஜைகள் அபிஷேகங்களும் நடந்தது.விழாவை முன்னிட்டு, பூர்வ குடிக்களான படுகர் மற்றும் பழங்குடியின மக்கள், கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்ததுடன், விடிய, விடிய பாரம்பரிய இசையுடன் நடனமாடி சாமியை தரிசனம் செய்தனர். நிறைவு நாளில், கோவிலிருந்து குலதெய்வ ஆபரணங்கள் மேளதாளத்துடன் மீண்டும் பூஜாரி வீட்டுக்கு எடுத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை