உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சட்ட விழிப்புணர்வு முகாம்; பழங்குடியினர் பயன்

சட்ட விழிப்புணர்வு முகாம்; பழங்குடியினர் பயன்

கூடலுார்:கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சி, மண்வயல் சமுதாய கூடத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கூடலுார் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று, நடந்தது. முகாமை, ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் துவக்கி வைத்தார்.சட்டப் பணிக்குழு உறுப்பினர்கள், சட்டங்கள் குறித்து விளக்கினர். முகாமில், பழங்குடியின மக்கள் ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். மருத்துவ துறை, சார்பில், ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்தனர். ஏற்பாடுகளை சட்ட பணிக்குழு ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை