உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசியல்வாதிகள் நுழைய பொதுமக்கள் எதிர்ப்பு

அரசியல்வாதிகள் நுழைய பொதுமக்கள் எதிர்ப்பு

பந்தலுார்;பந்தலுார் அருகே அடிப்படை வசதிகளை கேட்டு மக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.பந்தலுார் அருகே கூவமூலா பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.இங்கு பழங்குடியினர் மற்றும் இதர சமுதாய மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வரும் நிலையில், வாரத்தில் ஒரு நாள் செயல்பட்ட ரேஷன் கடை, வாடகை தராததால் மூடப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் சொந்த பணத்தில் வாடகை கட்டடத்தை வாங்கி, ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுத்தனர்.ஆனால், ரேஷன் கடை செயல்படுவதற்கு அனுமதி வழங்கவில்லை. அதேபோல் சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தி தராமல் நகராட்சி நிர்வாகம் போக்குகாட்டி வந்தது. இதனால், நொந்து போன பொதுமக்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரன் மற்றும் வார்டு கவுன்சிலர் ஷாகினா தலைமையில் கருப்பு கொடி கட்டி, 'அரசியல்வாதிகள் யாரும் ஓட்டு கேட்டு கிராமத்திற்குள் நுழையக்கூடாது,' என, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.தொடர்ந்து, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ. அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, தி.மு.க. நகரச் செயலாளர் சேகர், வக்கீல் சிவசுப்ரமணியம் உள்ளிட்டர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், 'ரேஷன் கடை செயல்பட உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்; குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்; தேர்தல் முடிந்ததும் சாலை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டது.அதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் கருப்பு கொடிகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை