உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வங்கியில் இணையதள சேவை குறைபாடு: வாடிக்கையாளர் அவதி

வங்கியில் இணையதள சேவை குறைபாடு: வாடிக்கையாளர் அவதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் இந்தியன் வங்கியில் இணையதள சேவை குறைபாட்டால் நேற்று ஒரு மணி நேரம் வரை காத்திருந்து வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்.ராமநாதபுரம் அருகே பாரதிநகர் இந்தியன் வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இணையதள சேவை முடக்கம் ஏற்பட்டது. இதனால் நகைகள் அடகு வைப்பதற்கும், திருப்பவும் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பணம் எடுக்க வந்தவர்கள், டிபாசிட் செய்ய வந்த வாடிக்கையாளர்கள் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து சிரமப்பட்டனர். பிரச்னைகளுக்கு வங்கி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என வாடிக்கையாளர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை