உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிடப்பில் போடப்பட்ட சாலை பணி கமுதி அருகே கிராம மக்கள் சிரமம்

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி கமுதி அருகே கிராம மக்கள் சிரமம்

கமுதி: கமுதி அருகே கீழநரியன் கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் பணிக்காலம் நிறைவு பெற்ற நிலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில் கிராம மக்கள் நடந்து செல்வதற்கும் சிரமப்படுகின்றனர்​.கமுதி அருகே வல்லந்தை ஊராட்சி கீழநரியன் கிராமத்தில் 800 மீ.,க்கு ரூ.49.56 லட்சம் மதிப்பீட்டில் 2022--23ம் ஆண்டு முதல்வரின்​கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நடைபெற்றது.சாலை பெயர்க்கப்பட்டு புதிதாக ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டி சமன் செய்தனர். திட்டப்பணிக் காலம் ஜன.10ல் நிறைவுபெற்ற நிலையில் தற்போது வரை தார் சாலை பணிகள் முடிவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டி உள்ளதால் நடந்து செல்வதற்கும் மக்கள் சிரமப்படுகின்றனர்.வாகனங்களில் செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் அரசு நிதியும் வீணடிக்கப்பட்டு வருகிறது. எனவே கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை