உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாய்க்காலில் மூழ்கிய சுமைதுாக்கும் தொழிலாளி

வாய்க்காலில் மூழ்கிய சுமைதுாக்கும் தொழிலாளி

இடைப்பாடி:இடைப்பாடி, க.புதுாரை சேர்ந்தவர் மதியழகன், 45. சுமைதுாக்கும் தொழிலாளியான இவர், மனைவி ராதா, மகள், இரு மகன்களுடன் நேற்று, இடைப்பாடி அருகே மேட்டூர் அணை கிழக்குக்கரை வாய்க்கால், பில்லுக்குறிச்சியில் குளித்தார். தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு மதியழகன் குளித்துக்கொண்டிருந்த நிலையில் மூழ்கிவிட்டார். அவர் குடும்பத்தினர் சத்தம்போட, அருகே உள்ளவர்கள் தேடினர். தொடர்ந்து இடைப்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இரவு, 8:00 மணி வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணி இன்று ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை