உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மெமோ பெற்ற 1,781 பேருக்கு நாளை பயிற்சி அளிக்க ஏற்பாடு

மெமோ பெற்ற 1,781 பேருக்கு நாளை பயிற்சி அளிக்க ஏற்பாடு

சேலம்:சேலம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கு, 3,257 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தேர்தல் பணியில் ஈடுபடும், 16,092 அலுவலர்களுக்கு கடந்த, 24ல் முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. அதில் அனுமதிக்கப்பட்டவர்களில், 2,682 பேர் மாற்று அலுவலர்களாக தயார் நிலையில் இருப்பவர்கள். அனைவருக்கும் சட்டசபை தொகுதி வாரியாக, 11 மையங்களில் பயிற்சி வகுப்பு தனித்தனியே நடந்தது. அதில் பங்கேற்காத, 1,781 பேருக்கு, 'மெமோ' வழங்கி விளக்கம் கோரப்பட்டுள்ளது. அவர்களுக்கு நாளை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர் நிலை 1 ஆகியோருக்கு, நாளை காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரையும், ஓட்டுச்சாவடி அலுவலர் நிலை, 2, 3, 4 ஆகிய அலுவலர்களுக்கு, மதியம், 2:00 முதல், 5:00 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ஏப்., 7ல் அனைவருக்கும், 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்படும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை