உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரத்தை வெட்டி கடத்த முயற்சி வி.ஏ.ஓ., போலீசில் புகார்

மரத்தை வெட்டி கடத்த முயற்சி வி.ஏ.ஓ., போலீசில் புகார்

ஏத்தாப்பூர்:ஏத்தாப்பூர், சாஞ்சான்குட்டையில் புளியமரங்களை மர்ம நபர்கள் வெட்டி மினி சரக்கு வேனில் நேற்று மதியம், 2:00 மணிக்கு ஏற்ற முயன்றனர். அப்பகுதி மக்கள் தகவல்படி, பெத்தநாயக்கன்பாளையம் வருவாய்த்துறையினர் அங்கு வந்தனர். அப்போது, மினி சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டிருந்த மரங்களை போட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பினர். இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் தாசில் தார் மாணிக்கம் கூறுகையில், ''இதுகுறித்து, வி.ஏ.ஓ., முருகேசன் புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை