உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கன்டெய்னர் லாரியில் சிக்கி வாலிபர் சாவு

கன்டெய்னர் லாரியில் சிக்கி வாலிபர் சாவு

சேலம், கன்டெய்னர் லாரியில் சிக்கி, வாலிபர் பலியானார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் விஷ்ணு ஜவகர், 17, பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் விஷால்குமார், 18, இவர்கள் இருவரும் மற்றொரு நண்பருடன், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணியளவில், ஒரே பைக்கில் டால்மியாவிலிருந்து மாமாங்கம் வந்துள்ளனர்.குடிபோதையில் இருந்ததால், சிக்னல் அருகில் திடீரென சாலையை கடந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்ததால், நிலைதடுமாறி பைக் மீது கவிழ்ந்தது. இதில், மூவரும் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தனர். விஷ்ணு ஜவகர், விஷால்குமார் இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உடன் வந்த, 20 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து, சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ