உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கல்லுாரி மாணவர்களை கொட்டிய தேனீக்கள்

கல்லுாரி மாணவர்களை கொட்டிய தேனீக்கள்

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று மாலை, 4:30 மணிக்கு கல்லுாரி முடிந்து வீட்டிற்கு செல்ல, கூட்டம் கூட்டமாக மாணவர்கள் வந்தனர். அப்போது அங்கு பறந்து வந்த தேனீக்கள், 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஆசிரியர்களை விரட்டி, விரட்டி கொட்டியது.இதனால் அவர்கள் வலியில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக, கல்லுாரி நிர்வாகம் சார்பில், மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்சென்று, வட்டார மருத்துவ அலுவலர் பிரசாந்த் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி