உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கனுபாரி வேட்டைக்கு ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் பவனி வந்த பெருமாள்

கனுபாரி வேட்டைக்கு ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் பவனி வந்த பெருமாள்

சேலம்,: அரசர்கள் காலத்தில் மக்கள், அவர்கள் வளர்க்கும் கால்நடைகளை காக்கும் பொறுப்பு அரசனுடையது. இதனால் காட்டு விலங்குகள், எதிரிகளிடம் இருந்து மக்களை காக்க அரசர் வேட்டைக்கு செல்வது, போர் தொடுப்பது வழக்கம்.அதேபோல் பெருமாள், உலக உயிர்களை காக்க, மாட்டுப்பொங்கலன்று குதிரை வாகனத்தில், 'கனுபாரி வேட்டை' உற்சவத்தில் முக்கிய வீதிகளில் பவனி வந்து அருள்பாலிப்பார்.அதன்படி சேலம் அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவில்களில் இருந்து உற்சவர் பெருமாள் சுவாமிகள், ராஜ அலங்காரங்களில் குதிரை வாகனங்களில், பட்டைக்கோவில் முதல் அம்மாபேட்டை காளியம்மன் கோவில் வரை பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.சிவன் கோவில்களில் பூஜைமாட்டு பொங்கலையொட்டி ஆத்துார் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. ஆப்பிள், வாழை உள்பட, 20க்கும் மேற்பட்ட பழங்கள், அதிரசம், முறுக்கு, சீடை உள்ளிட்ட பலகாரம், கத்திரிக்காய், முருங்கை, அவரை, வாழைக்காய் உள்ளிட்ட காய்கறி, முல்லை, ரோஜா, மல்லி உள்ளிட்ட மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.அதேபோல் ஆத்துார் கைலாசநாதர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனுார் கங்காசவுந்தரேஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை