உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இடைப்பாடி, வாழப்பாடியில் இன்று தி.மு.க., கூட்டம்

இடைப்பாடி, வாழப்பாடியில் இன்று தி.மு.க., கூட்டம்

இடைப்பாடி: தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி அறிக்கை:இடைப்பாடியில் உள்ள நடராஜன் மஹால் திருமண மண்ட-பத்தில், ஜன., 2ல்(இன்று), மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகிக்கிறார். தை திருநாளை திராவிட பொங்கலாக கொண்டாடு-வது குறித்தும், எஸ்.ஐ.ஆர்., கட்சி பணிகள் குறித்தும் விவாதிக்-கப்பட உள்ளதால், தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட நிர்வா-கிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய செயலர்கள், பொறுப்பாளர்கள், பேரூர் செயலர்கள், துணை அமைப்புகளின் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்-டுள்ளது.அதேபோல், சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, வாழப்பாடியில் உள்ள, தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி தலை-மையில் நடக்கிறது. அனைத்து நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என, சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தெரிவித்-துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை