| ADDED : ஜன 09, 2024 10:30 AM
ஏற்காடு: ஏற்காட்டில், கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், இரவு நேரத்தில் கடும் குளிர் நிலவி வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.பனிமூட்டத்தால், சிறிது தூரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். ஏற்காட்டில் இருந்து, சேலத்திற்கு படிக்க செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் குடை பிடித்தவாறு வெகு நேரம் காத்திருந்து பஸ்சில் ஏறி சென்றனர். சாரல் மழையால் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்காட்டில், வேலைக்கு செல்லும் உள்ளூர் கூலி தொழிலாளர்கள், வீட்டில் முடங்கும் சூழல் நிலவியது.