உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டி.என்.பி.எஸ்.சி., தேர்வு:இன்று சிறப்பு பஸ் இயக்கம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு:இன்று சிறப்பு பஸ் இயக்கம்

சேலம்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான (கணினி சார்ந்த தேர்வு) தேர்வு, இன்று காலை, மாலை நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலுார், சங்ககிரி, வாழப்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட, 7 மையங்களில் தேர்வு நடக்கிறது. 2,416 பேர் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள், உரிய நேரத்துக்குள் மையத்துக்கு செல்ல ஏதுவாக, தேவைக்கு ஏற்ப அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இத்தகவலை சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ