உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காற்றாலை மின் உற்பத்தி பூஜ்யம்

காற்றாலை மின் உற்பத்தி பூஜ்யம்

தமிழக, மத்திய மின் உற்பத்தி அமைப்புகள் மூலம் அதிகபட்சம், 19,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதில் காற்றாலைகள் மூலம், 8,923 மெகாவாட் உற்பத்தி செய்யலாம்.ஒரு மாதமாக காற்றின் வேகம் குறைவாக உள்ளதால் காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம், 539 மெகாவாட்டாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, நேற்று காற்று வீசாததால், 'பூஜ்யம்' ஆனது.நேற்று முன்தினம், 18,337 மெகாவாட்டாக இருந்த தமிழக மின்நுகர்வு, விடுமுறை நாளான நேற்று, 15,318 மெகாவாட்டாக சரிந்தது. தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று சீசன், வரும் ஜூனில் தொடங்கும். அப்போது காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் என, மின்வாரிய வட்டாரத்தினர் தெரிவித்தனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை