உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் வறட்சியால் 250 ஏக்கர் நெல் பாதிப்பு

திருப்புத்துாரில் வறட்சியால் 250 ஏக்கர் நெல் பாதிப்பு

திருப்புத்துார்: திருப்புத்துார் வட்டாரத்தில் கடந்த சீசனில் வறட்சியால் 250 ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது வேளாண்துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.திருப்புத்துார் வட்டாரத்தில் கடந்த ஆடிப்பட்டத்தில் வறட்சியால் நெல் சாகுபடி பாதித்தது. அரசு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுக்க அறிவுறுத்தியது. அதில் திருப்புத்தூர் வட்டாரத்தில் திருக்கோஷ்டியூர் மற்றும் திருப்புத்துார் பிர்கா பகுதியில் 250 ஏக்கர் அளவில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது கணக்கெடுப்பில் தெரியவந்ததுள்ளது. மே 21ம் தேதியன்று திருப்புத்துாரில் 6 செ.மீ அளவில் மழை பெய்தது. மேலும் சில நாட்கள் சாதாரண அளவில் மழை பெய்துள்ளது. இது குறித்து வேளாண்துறையினர் கூறுகையில், ஒரு நாள் பலத்த மழையால் பாதிப்பு குறித்து தகவல் ஏதுமில்லை. தற்போது பெய்து வரும் மழையால் 150 ஏக்கர் அளவில் விவசாயிகள் கோடை உழவு செய்துள்ளனர். மழை தொடர்ந்தால் விவசாயிகள் சாகுபடி செய்ய தயாராக உள்ளார்கள்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்