உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ., மாவட்ட செயலாளர் நீக்கம்

பா.ஜ., மாவட்ட செயலாளர் நீக்கம்

சிவகங்கை: பா.ஜ., சிவகங்கை மாவட்ட செயலாளர் சேதுசிவராமன், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக மாவட்ட தலைவர் சத்தியநாதன் தெரிவித்தார்.பா.ஜ., சிவகங்கை மாவட்ட செயலாளராக திருப்புத்துாரை சேர்ந்த சேதுசிவராமன் இருந்தார். அவர் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி, அவரை கட்சியில் இருந்து நீக்கி மாவட்ட தலைவர் சத்தியநாதன் உத்தரவிட்டார். மேலும் மாநில தலைமை உத்தரவுபடி திருப்புத்துார் தொகுதி பார்வையாளராக வி.பாலமுருகன், அமைப்பாளராக ஏவி., நாகராஜன், இணை அமைப்பாளராக ஏ.முருகேசன் ஆகியோர் தொடர்ந்து நீடிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி