உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிநீர் குழாய் பதிக்க நான்கு வழிச்சாலையில் ஆய்வு

குடிநீர் குழாய் பதிக்க நான்கு வழிச்சாலையில் ஆய்வு

திருப்புவனம் : திருப்புவனத்தில் இருந்து அல்லிநகரம், வெள்ளக்கரை உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நான்கு வழிச்சாலையின் அடியில் குழாய் பதிப்பதற்காக நேற்று ஆய்வு பணி நடந்தது.திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. நகர்ப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட நிலையில் சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. திருப்புவனம் வழியாக மதுரை - - பரமக்குடி நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. சாலையை சேதப்படுத்தாமல் சாலையின் அடியில் குழாய் பதிக்கப்பட உள்ளது. இதற்காக நான்கு வழிச்சாலையின் அடியில் பாறைகள், தொலைதொடர்பு கேபிள்கள் உள்ளிட்டவை உள்ளதாக என டிராக்கிங் மெஷின் மூலம் நேற்று ஆய்வு பணிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை