உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கவுன்சிலர் மீது  சிவகங்கை நகராட்சி கமிஷனர் புகார்

கவுன்சிலர் மீது  சிவகங்கை நகராட்சி கமிஷனர் புகார்

சிவகங்கை : சிவகங்கை நகராட்சி அ.ம.மு.க., 15வது வார்டு கவுன்சிலர் அன்புமணி மீதும் 13வது வார்டு கவுன்சிலர் கணவர் மீதும் போலீசில் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராம் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில் கூறியிருப்பதாவது, சிவகங்கை நகராட்சி அ.ம.மு.க., கவுன்சிலர்கள் 15 வார்டு கவுன்சிலர் அன்புமணி மற்றும் 13வது வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வி கணவர் சாரதிபாண்டியன் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ள நிலையில் நகராட்சி அலுவலக நேரங்களில் நகராட்சிக்கு வந்து மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட கோப்பினை கேட்கின்றனர்.நகராட்சி ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய நகராட்சி ஒப்பந்த விதிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டிய பட்டியல் விபரத்தை கேட்டு நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை மிரட்டுவது போன்ற செயல்களை அடிக்கடி செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் செயல்படுதலை தடுக்கும்பொருட்டு நகராட்சி கவுன்சிலர் அன்புமணி மீதும், சாரதிபாண்டியன் மீதும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும், மார்ச் 25 திங்கட்கிழமை முதல் நகராட்சிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து உதவுமாறு நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராம் சிவகங்கை இன்ஸ்பெக்டருக்கு அனுப்பிய புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை