உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தை ஏற்படுத்தும் கேபிள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விபத்தை ஏற்படுத்தும் கேபிள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்புவனம : திருப்புவனம் நகரின் பல இடங்களில் தனியார் தொலை தொடர்பு கேபிள் ரோட்டில் கிடப்பதால் தினசரி பலரும் அதில் சிக்கி காயமடைகின்றனர்.திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் பொதுமக்களுக்கு கேபிள் மூலம் இணைப்பு வழங்கி வருகின்றன.இது தவிர திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பாரத் பைபர் கேபிள் மூலம் சுற்று வட்டார கிராம ஊராட்சிகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இணைப்புகள் வழங்க ஆப்டிகல் பைபர் கேபிள்களை கொண்டு வந்து ஆங்காங்கே பாதுகாப்பின்றி வைத்துள்ளனர்.பல இடங்களில் கேபிள்கள் 50 மீட்டர் தூரத்திற்கு ரோட்டில் சிதறி கிடக்கின்றன. நடந்து செல்பவர்கள், டூவீலர்களில் செல்பவர்கள் என பலரும் கேபிள்களில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். பலமுறை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் கேபிள்களை அப்புறப்படுத்த வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.ரோட்டில் கேபிள் கிடப்பதால் பெண்களுடன் செல்லும் பலரும் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை