மேலும் செய்திகள்
போலீஸ் எனக்கூறி ரூ.44.59 லட்சம் பறிப்பு
11-Dec-2025
தஞ்சாவூர்:சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணன். இவர், 'ஸ்ரீ குருகிருபா டெவலப்பர்ஸ்' என்ற கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தர் பரத்வாஜ், ஜெயந்தி சுந்தர் ஆகியோரிடம், அடுக்கு மாடி குடியிருப்பில் தனி பிளாட் கேட்டு, முன்தொகையாக, 5 லட்சம் ரூபாயை கடந்த, 2022ல் செலுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே சிவபுரத்தில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில், வீடு ஒதுக்கீடு செய்துள்ளதாக கிருஷ்ணனுக்கு தகவல் அனுப்பினர். அதனால், 25.18 லட்சம் ரூபாயை, 'ஸ்ரீ குருகிருபா டெவலப்பர்ஸ்' நிறுவனத்திற்கு, பல தவணைகளாக செலுத்தினார்.எனினும், கிருஷ்ணனுக்கு என ஒதுக்கப்பட்டதாகக் கூறிய வீட்டை வழங்காமல் இழுத்தடித்தனர். இதனால், கடந்த மே 6ல், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் செய்தார். இவ்வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர் வேலுமணி, 'ஸ்ரீ குருகிருபா டெவலப்பர்ஸ்' நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள், 25.18 லட்சம் -ரூபாயை, கிருஷ்ணனிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு, 9 சதவீத வட்டி வழங்க வேண்டும். மேலும், சேவைக் குறைபாடு, தவறான வணிக நடவடிக்கைகளுக்காக, 5 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகை, 10,000 ரூபாயை, 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்' எனவும் நேற்று உத்தரவிட்டனர்.
11-Dec-2025