உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விதி மீறி மதுபாட்டில்கள் விற்ற டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஐவர் மீது வழக்கு மதுபாட்டில் விற்ற இருவர் கைது

விதி மீறி மதுபாட்டில்கள் விற்ற டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஐவர் மீது வழக்கு மதுபாட்டில் விற்ற இருவர் கைது

தேனி : விதிமீறி மதுபாட்டில்களை விற்ற டாஸ்மாக் விற்பனையாளர், மேற்பார்வையாளர், பார் உரிமையாளர் உட்பட ஐவர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.தேனி எஸ்.ஐ., மாயன் தலைமையிலான போலீசார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள காட்டுப் பத்திரகாளியம்மன் கோயில் அருகே ரோந்து சென்றனர். அங்கு நின்றிருந்த அரவிந்தன், தமிழரசன் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை பிடித்து, 22 மதுபாட்டில்கள், மதுவிற்ற பணம் ரூ.1450ஐ கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர்.கைது செய்த அரவிந்தன் வாக்குமூலத்தில் , 'காட்டு பத்திரகாளியம்மன் கோயில் டாஸ்மாக் பார் உரிமையாளர் விஜயனிடம் புணிபுரிவதாகவும், தினமும் பார் முடிந்த பின் டாஸ்மாக்கில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பது வழக்கம். ஜூன் 26 இரவில் டாஸ்மாக் விற்பனையாளர் அமரேசன், மேற்பார்வையாளர் மணிகண்டனிடம் ரூ.140 விலையிலான மது பாட்டிலை ரூ.155 விலைக்கு 40 மதுபாட்டில்களை வாங்கி அதனை ரூ.200 விற்றேன்.இதில் கிடைக்கும் லாபத்தை நான், பார் உரிமையாளர் விஜயன், தமிழரசன், டாஸ்மாக் விற்பனையாளர் அமரேசன், ,மேற்பார்வையாளர் மணிகண்டன் அனைவரும் பகிர்ந்து கொள்வோம்.' என்றார். நால்வரும் மதுவிலக்கு விதி மீறியதாக தேனி போலீசார் அரவிந்தன், தமிழரசன், பார் உரிமையாளர் விஜயன், டாஸ்மாக் விற்பனையாளர் அமரேசன், மேற்பார்வையாளர் மணிகண்டன் உள்ளிட்ட ஐவர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். டாஸ்மாக் விற்பனையாளர், மேற்பார்வையாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கலெக்டர், டாஸ்மாக் மேலாளருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மொத்த மதுபாட்டில் விற்ற ஊழியர்களுக்கு நோட்டீஸ்

தேவதனாப்பட்டி அருகே புல்லகாப்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி விற்பனைக்காக வைத்திருந்த 70 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்ததில் தேவதானப்பட்டி டாஸ்மாக் கடையில் வாங்கியதாக தெரிவித்தார்.அந்த கடை மேற்பார்வையாளர் வேல்முருகன், விற்பனையாளர்கள் செல்வகுமார், காளியப்பன் உடந்தையாக இருந்ததால் மூவர் மீதும் வழக்கு பதிந்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்பார்வையாளர், விற்பனையாளர்களிடம் மொத்த விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை