| ADDED : மார் 22, 2024 05:26 AM
உத்தமபாளையம்: ஞானம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்தி வீதி உலா நடைபெற்றது.உத்தமபாளையம் ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலைநடந்தது.இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு ஞானாம்பிகை காளாத்தீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.சிவன் கோயில்களில் கும்பாபிஷேகம் மற்றும் தேரோட்ட நாட்களில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.அதன் பேரில் நேற்று முன்தினம் இரவு ஞானம்பிகை கோயிலில் இருந்து விநாயகர், முருகன்வள்ளி தெய்வானை, சோமஸ்கந்தர், ஞானாம்பிகை, சண்டிகேஸ்வரர் சர்வ அலங்காரத்தில் தனித் தனி ரதங்களில் நகரில் வீதி உலாவந்தனர். நள்ளிரவிலும் வீதிகளில் பெண்கள் திரண்டு நின்று பஞ்ச மூர்த்திகளை வழிபட்டனர்.பஞ்ச மூர்த்தி வழிபாடு மற்ற நாட்களில்நடைபெறாது. இந்த நிகழ்ச்சிகளை காளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள்செய்திருந்தனர்.