உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரண பயம் போக்க கிராம மக்கள் ஒன்று கூடி கோயில்களில் வழிபாடு

மரண பயம் போக்க கிராம மக்கள் ஒன்று கூடி கோயில்களில் வழிபாடு

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியில் அடுத்தடுத்து ஆறு இளைஞர்கள் பலியானதால் ஊர் மக்கள் ஒன்று கூடி கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர்.மேலப்பட்டி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். கடந்த மாதம் இக்கிராமத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர். கோவை மாவட்டம் சூலூரில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் பலியானார்கள். இதே காலகட்டத்தில் ராணுவ வீரர் ஒருவரும் விபத்தில் இறந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இறப்புகளால் கிராம மக்களிடம் பீதி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இப்பகுதி மக்கள் காவல் தெய்வங்களாக வழிபடும் விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மூலம் பரிகாரம் செய்ய கிராம கமிட்டி முடிவு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து ஆடி வெள்ளி நாளான நேற்று அதிகாலையில் அனைத்து வீடுகளில் இருந்தும் பால், தயிர், பன்னீர், சந்தனம் உட்பட பலவகை அபிஷேகப் பொருட்களை கொண்டு சென்று விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன் சுவாமிகளுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்து வழிபட்டனர். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து, கொண்டுவரப்பட்ட கயிறுகளை கிராம மக்கள் அனைவரும் கைகளில் கட்டப்பட்டது. இந்த சிறப்பு வழிபாடு மூலம் இனி வரும் நாட்களில் தங்கள் கிராமத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் நடக்காது என்று இப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை