| ADDED : ஆக 10, 2024 06:44 AM
தேனி : சில்லரை கஞ்சா வியாபாரிகளுக்கு சப்ளை செய்த ஆந்திரா சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கம்பம் வடக்கு, கடமலைக்குண்டு போலீசில்2 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து 31 கிலோ கஞ்சா கைப்பற்றி 7 குற்றவாளிகள் கைது செய்துள்ளனர்.இந்த வழக்குகளில் நடந்த விசாரணையில் ஆந்திரா, விசாகபட்டிணத்தைச் சேர்ந்த மஞ்சுநாதகுமார், பீட்டாரமணா ஆகிய இரு கஞ்சா வியாபாரிகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.இவர்களை பிடிக்க தேனி எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவில், கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ.,க்கள் கதிரேசன், மணிகண்டன் அடங்கிய தனிப்படையினர் விசாகபட்டிணம் சென்றனர்.கஞ்சாவியாபாரிகளை கண்காணித்து ஆக., 6ல் மஞ்சுநாதகுமாரையும், மறுநாள் பீட்டா ரமணாவை கைது செய்து, விசாகபட்டிணம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, டிரான்ஷிட் வாரண்ட்' பெற்றனர்.பின் மதுரை போதைப்பொருட்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கைதான இருவரும் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கஞ்சா சில்லரை வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்துள்ளனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எஸ்.பி., தெரிவித்துள்ளார்.