உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

போடி: போடி அருகே சுந்தரராஜபுரத்தில் கால்நடை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் இயக்குனர் நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. மண்டல இணை இயக்குனர் அன்பழகன், உதவி இயக்குனர்கள் முருகலட்சுமி, சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடைகளுக்கான சிகிச்சை, குடற்புழு நீக்கம், சுண்டுவாக அறுவை சிகிச்சை, கோழி கழிச்சல் தடுப்பூசி, சினை பிடிக்காத மாடுகளுக்கு மலட்டு நீக்கம் சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டன.முகாமில் ஆறு சிறந்த கிடேரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் நபிஷா பர்வீன், ஆய்வாளர்கள் திலகம், தமிழ்ச்செல்வி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை